மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் நோக்கில் மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதேசமயம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவையும் சந்தித்து பேசுகிறார். கடந்த மாதம் பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை கிளப்பியது. ஆனால் மகாராஷ்டிரா மாநில பிரச்சினை தொடர்பாக மோடியை சரத் பவார் சந்தித்தார் என்று கூறப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
பா.ஜ.க.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சரத் பவார் சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சர்க்கரை கூட்டுறவு மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் குறித்து அமித் ஷாவிடம் சரத் பவார் ஆலோசனை செய்ததாக தகவல். சரத் பவாருடன் சர்க்கரை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 2 பேரும் சரத் பவாருடன் சந்திப்புக்கு சென்று இருந்தார்கள் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சரத் பவார்- பிரதமர் மோடி (கோப்புப்படம்)

சரத் பவார் அமித் ஷாவிடம், சர்க்கரை விற்பனை விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும். எத்தனால் கலவை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் கொங்கன் பகுதியில் சிறந்த நிவாரண ஒருங்கிணைப்புக்காக தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தை அமைப்பது குறித்தும் விவாதித்ததாக தகவல்.