தேசிய வாக்காளர் தினம்- வாணியம்பாடியில் அரசு அதிகாரிகள், மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

 

தேசிய வாக்காளர் தினம்- வாணியம்பாடியில் அரசு அதிகாரிகள், மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாணியம்பாடியில் நடைபெற்ற மனிதசங்கிலி நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள மருதர் ஜெயின் மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதனையொட்டி கல்லூரி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் ஏராளமான வருவாய் துறையினர் கலந்துகொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தேசிய வாக்காளர் தினம்- வாணியம்பாடியில் அரசு அதிகாரிகள், மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று, சமூக இடைவெளியுடன் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், பேரணியாக சென்று மனித சங்கிலியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் லிக்மிசந்த் ஜெயின், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.