நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள்: இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஒடிசா மாணவர்!

 

நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள்:  இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஒடிசா மாணவர்!

செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகின. ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் இணையதளத்தை நாடியதால் அந்த இணையதளம் சிறிது நேரம் முடங்கி பின் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 48.57 % சதவீதமாக இருந்த நீட் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 57.44% ஆக உயர்ந்துள்ளது.

நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள்:  இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஒடிசா மாணவர்!

நீட் தேர்வில் 99.99% மதிப்பெண்கள் பெற்று ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 720 க்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதுவரை நடந்த நீட் தேர்வில் எந்த மாணவரும் முழு மதிப்பெண்கள் வாங்கியதில்லை.

தான் அடைந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோயப் அப்தாப், “என் குடும்பத்தில் ஒரு மருத்துவர் இல்லை. இருப்பினும் இப்படி ஒரு மதிப்பெண்ணை நான் எதிர்பார்க்கவில்லை. நான் முதல் 100 அல்லது முதல் 50 இடங்களைப் பிடிப்பேன் என்று நம்பினேன். ஆனால் 720/720 மதிப்பெண் பெறுவேன் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டது, எனவே அதிக மன அழுத்தமாக இருந்தது. ஆனால் குறிக்கோள் அமைதியாக இருந்தஹ்டு மற்றும் நேரத்தை தகுந்த வழியில் பயன்படுத்தினேன்” எனக் கூறினார்.

இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடம் பிடித்துள்ளார். 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தனியார் பள்ளி மாணவர் ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, அசாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.