தீவிரவாத வழக்கில் மெகபூபா முப்தி கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது… தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி

தீவிரவாத வழக்கில் மெகபூபா முப்தி கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது… தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி

காஷ்மீரின் முன்னாள் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் தொடர்புடைய தீவிரவாத வழக்கில், மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் டி.எஸ்.பி தேவிந்தர் சிங் தொடர்பான தீவிரவாத வழக்கில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி தலைவர் வாகீத் உர் ரஹ்மான் பர்ரா பெயர் அடிபட்டது. இதனையடுத்து வாகீத் உர் ரஹ்மான் பர்ராவை தேசிய புலனாய்வு அமைப்பு டெல்லியில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் அழைத்து வந்தது.

தீவிரவாத வழக்கில் மெகபூபா முப்தி கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது… தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி
வாகீத் உர் ரஹ்மான் பர்ரா

கடந்த 2 தினங்களாக பர்ராவிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அவரை நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். தேவிந்தர் சிங் சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி வாகீத் உர் ரஹ்மான் பர்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத வழக்கில் மெகபூபா முப்தி கட்சியின் இளைஞர் அணி தலைவர் கைது… தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி
மெகபூபா முப்தி

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இது தொடர்பாக டிவிட்டரில், வாகீதுக்கு இந்த மனிதனுடன் (தேவிந்தர் சிங்) எந்த தொடர்பும் இல்லை, அவர் மீது பொய்யாக குற்றம்சாட்டப்படுகிறது. இது எல்லாம் ஜம்மு அண்டு காஷ்மீரின் பிரதான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் இதர கட்சிகளை மிரட்ட மற்றும் அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்று பதிவு செய்து இருந்தார்.