எல்.முருகன் மீதான தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

எல்.முருகன் மீதான தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீதான தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில், காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எல்.முருகன் மீதான தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

சுதந்திர தினத்தன்று தி.நகரில் இருக்கும் பாஜக அலுவலகத்தில், மாநிலத் தலைவர் எல்.முருகன் கொடியேற்றினார். அப்போது, பாஜக கொடி ஏற்றக்கூடிய கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதாக முகப்பேறு பகுதியை சேர்ந்த குகேஷ் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்குப்பதிவு செய்யக்கோரி குகேஷ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான புகார் தற்போது மாம்பலம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

எல்.முருகன் மீதான தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

இந்த நிலையில், எல்.முருகனுக்கு எதிராக குகேஷ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், முருகன் மீதான வழக்கு குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கியுள்ளனர்.