கடும் அமளிக்கு மத்தியில் பீகார் சபாநாயகராக விஜய் சின்ஹா தேர்வு… மகா கூட்டணி வேட்பாளர் தோல்வி..

 

கடும் அமளிக்கு மத்தியில் பீகார் சபாநாயகராக விஜய் சின்ஹா தேர்வு… மகா கூட்டணி வேட்பாளர்  தோல்வி..

பீகாரில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் விஜய் சின்ஹா வெற்றி பெற்றார். மகா கூட்டணி வேட்பாளர் 114 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி கண்டார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசு கடந்த 16ம் தேதியன்று உதயமானது. இடைக்கால சபாநாயகராக ஜித்தன் ராம் மாஞ்சி பொறுப்பேற்றார். புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கடும் அமளிக்கு மத்தியில் பீகார் சபாநாயகராக விஜய் சின்ஹா தேர்வு… மகா கூட்டணி வேட்பாளர்  தோல்வி..
ஜித்தன் ராம் மாஞ்சி

இதனையடுத்து நேற்று முன்தினம் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜய் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுவாக சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும். இருந்தாலும் மகா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. அவாத் பிஹாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.நேற்று பீகார் விதான் சபாவில் (சட்டப்பேரவை) சபாநாயகருக்கான தேர்தலை இடைக்கால சபாநாயகர் ஜித்தன் ராம் மாஞ்சி நடத்தினார். குரல் வாக்கெடுப்பு வாயிலாக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

கடும் அமளிக்கு மத்தியில் பீகார் சபாநாயகராக விஜய் சின்ஹா தேர்வு… மகா கூட்டணி வேட்பாளர்  தோல்வி..
தேஜஸ்வி யாதவ்

குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்த கூடாது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் வலியுறுத்தியது. ஆனால் இடைக்கால சபாநாயகர் மறுத்து விட்டார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் கடும் அமளில் ஈடுப்பட்டனர். இருப்பினும் சபாநாயகர் தேர்தல் குரல் வாக்கெடுப்பு வாயிலாகவே நடைபெற்றது. இதில் 126 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் விஜய் சின்ஹா வெற்றி பெற்றார். மகா கூட்டணி வேட்பாளருக்கு 114 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தேர்தல் முடிந்த பின்னர் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர்கள் தார் கிஷோர் பிரசாத், ரேணு தேவி மற்றும் ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விஜய் சின்ஹாவை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்றனர்.