‘தினமும் 77 பெண்கள் பாலியல் பலாத்காரம்’… தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட பகீர் தகவல்!

 

‘தினமும் 77 பெண்கள் பாலியல் பலாத்காரம்’… தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட பகீர் தகவல்!

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தினமும் சராசரியாக 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. தினந்தோறும் நாட்டின் எங்கோ ஓர் மூலையில் சிறுமியோ அல்லது பெண்ணோ பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதைப் போல உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

‘தினமும் 77 பெண்கள் பாலியல் பலாத்காரம்’… தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட பகீர் தகவல்!

இந்த நிலையில், கடந்த ஓராண்டில் பதிவான பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மொத்தமாக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 4,05,236. அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மட்டும் 27,046. நாளொன்றுக்கு சராசரியாக 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் பாலியல் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 77 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.