‘செம ஹிட்டான திருநங்கை கெட் அப்’… விஜய் சேதுபதியை அங்கீரித்த மத்திய அரசு!

‘செம ஹிட்டான திருநங்கை கெட் அப்’… விஜய் சேதுபதியை அங்கீரித்த மத்திய அரசு!

தமிழ் திரையுலகில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மக்கள் மனதில் கால் பதித்தவர் நடிகர் ‘விஜய் சேதுபதி‘ என்று சொன்னால் அது மிகையாகாது. ரம்மி, செக்க சிவந்த வானம், பண்ணையாரும் பத்மினியும், கவண், விக்ரம் வேதா, இமைக்கா நொடிகள், க/பெ.ரணசிங்கம் என இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் தான். விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவரை மாஸ் ஆன தோனியிலேயே காட்டின.

‘செம ஹிட்டான திருநங்கை கெட் அப்’… விஜய் சேதுபதியை அங்கீரித்த மத்திய அரசு!

அந்த பிம்பங்களை உடைத்தெறிந்த படம் என்றால் அது ‘சூப்பர் டீலக்ஸ் தான்’. திருநங்கை போன்ற ஒரு சேலஞ்சிங் ஆன கதாபாத்திரத்தை தேர்வு செய்ததற்கே அவருக்கு தனி பாராட்டுக்கள். நாம் செய்யும் விஷயங்கள் நல்லதா? கெட்டதா? என பல கோணங்களில் அலசி ஆராயாமல் நாம் போகும் போக்கில் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக அமைந்தது சூப்பர் டீலக்ஸ்.

‘செம ஹிட்டான திருநங்கை கெட் அப்’… விஜய் சேதுபதியை அங்கீரித்த மத்திய அரசு!

ஒரு திருநங்கை இந்த சமூகத்தில் எவ்வளவு பாதிப்புக்கு ஆளாகிறார் என்பதை அழகாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லியது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு ‘வேற லெவல்’ என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவுக்கு இருந்தது.

‘செம ஹிட்டான திருநங்கை கெட் அப்’… விஜய் சேதுபதியை அங்கீரித்த மத்திய அரசு!

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை மத்திய அரசு தற்போது அங்கீகரித்துள்ளது. இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு துணை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘செம ஹிட்டான திருநங்கை கெட் அப்’… விஜய் சேதுபதியை அங்கீரித்த மத்திய அரசு!

அதே போல, சிறந்த நடன இயக்குனர் விருது ராஜூ சுந்தரத்துக்கும் பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு விருதும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெற்றிமாறனின் அசுரன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும், சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.