டாஸ்மாக் முறைகேடு- சிக்கும் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி!

 

டாஸ்மாக் முறைகேடு- சிக்கும் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி!

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்க்க சென்னையில் செப்டம்பர் 2 ஆம் தேதி கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்படும் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு- சிக்கும் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி!

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விளக்கவும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் பொதுச்செயலாளர் திருச்செல்வம், “டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் வழிகாட்டுதல் உருவாக்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல்களை பெறுகின்றனர். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் தலையீடும் துறை அமைச்சரின் அலுவலக பரிந்துரைகளும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி ஆகியோரது பெயர்களில் ஆயிரக்கணக்கான பணியிட மாறுதல் மற்றும் பணி வழங்குதல் ஆணைக்களுக்கான பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணம் கைமாறி உள்ளது, இதில் பல மோசடிகளும் நடந்துள்ளன. தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு கொள்கைக்கு ஏற்ப கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி தேவைப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானித்து அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

டாஸ்மாக் முறைகேடு- சிக்கும் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தங்கமணி!

கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் தேசிய பண்டிகை விடுமுறை சட்டம் இஎஸ்ஐ சட்டத்திலிருந்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு அரசு வழங்கும் விதிவிலக்கை திரும்பப்பெற வேண்டும், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரின் மருத்துவ சிகிச்சைக்கு பலனளிக்கக் கூடிய இயற்கை மருத்துவத்தை அமல்படுத்திட வேண்டும், கொரோனா தொற்றையும் பாராமல் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர், அவர்களை இழந்து நிர்கதியாய் இருக்கும் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிவாரணத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும், இதுபோல் டாஸ்மாக் ஊழியர்கள் முன்வைக்கும் 20 கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றும் வகையில் செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணி நடத்தப்படும்” என தெரிவித்தார்.