நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

 

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் நத்தம் விஸ்வநாதன். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற இவர் தற்போது அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

அத்துடன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டு 11,900 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் சமீபத்தில் சசிகலா தாய் அல்ல பேய் என விமர்சித்து இருந்தார். சசிகலா குறித்து நத்தம் விஸ்வநாதன் விமர்சனம் செய்திருந்த நிலையில் கோவையில் அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்டன.

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுவலி காரணமாக நத்தம் விசுவநாதன் மருத்துவமனையில் அனுமதி பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.