கலைஞரின் பாடலை இசைத்து, நிவாரண உதவி கோரிய நாதஸ்வர கலைஞர்கள்!

 

கலைஞரின் பாடலை இசைத்து,  நிவாரண உதவி கோரிய நாதஸ்வர கலைஞர்கள்!

கோவை

கொரோனா உரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி, மேடை நாக கலைஞர்கள் கலைஞரின் பாடல்களை இசைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளதால், திருவிழாக்கள் நடைபெற வில்லை. இதனால் தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் வாழ்வாதரம் இன்றி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் மேளம் இசைக்கும் கலைஞர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில், கோவை சின்ன வேடம்பட்டியில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், தங்களது நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும், நிவாரண கோரியும் நேற்று தவில் மற்றும் நாதஸ்வரம் இசைத்து தங்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைத்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இவர்கள் இசையால் பல்வேறு பாடல்களை பாடினர்.

கலைஞரின் பாடலை இசைத்து,  நிவாரண உதவி கோரிய நாதஸ்வர கலைஞர்கள்!

இதுகுறித்து பேசிய இசைக் கலைஞர்கள், கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால், வருவாய்க்கு வழியின்றி தவித்து வருவதாக தெரிவித்தனர். மேலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு ஊரடங்கு நிலை நீடிக்கும் என்பது தெரியாததால் தங்களது எதிர் காலமே கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

எனவே, மக்களை மகிழ்விக்கும் தங்களை போன்ற கலைஞர்களுக்கு, அரசு போதிய நிவாரணம் வழங்கி வாழ்வாதாரம் காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள், “மக்கள் நலம் சிறக்க மேளம் அடிக்கிறோம், கொரோனாவால் சிக்கி தவிக்கிறோம்” என்று வருத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒரு பாடலை வாசித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.