நடராஜனின் விக்கெட் வேட்டை ஸ்டார்ட் – டெஸ்ட்டில் அதிரடி விக்கெட்டுகள்

 

நடராஜனின் விக்கெட் வேட்டை ஸ்டார்ட் – டெஸ்ட்டில் அதிரடி விக்கெட்டுகள்

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான நாள் தமிழகத்தின் இரு பவுலர்கள் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருவரும் விக்கெட் பறித்துள்ளனர்.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இருவரும் இன்றைய நான்காம் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்களாகக் களம் இறங்கியுள்ளனர். இதில் காலையிலேயே வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டைப் பறித்திருந்தார். அவர் வீழ்த்தியிருந்தது ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித்.

நடராஜனின் விக்கெட் வேட்டை ஸ்டார்ட் – டெஸ்ட்டில் அதிரடி விக்கெட்டுகள்

இன்றும் அறிமுகப் போட்டியில் களம் இறங்கியுள்ள மற்றொரு வீரரான நடராஜன் சற்றுமுன் அற்புதமான ஒரு விக்கெட்டை சாய்த்துள்ளார்.  நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. ஆனால், வார்னர் இந்த போட்டியிலும் சொற்ப ரன்னில் (1 ரன் மட்டுமே) அவுட்டானர்.

ஆனாலும், லபுஷேன் மற்றும் மாத்யூ வேட் ஜோடி அற்புதமான பார்டனர்ஷிப் கோர்த்து அதிரடியாக ஆடி வந்தனர். இந்த ஜோடியைப் பிரிக்கா விட்டால் ஸ்கோர் எக்குத்தப்பாக எகிரும் என்ற நிலை இருந்தது.  இந்நிலையில் நடராஜன் தனது 13 வது ஓவரை வீச வந்தார். அதில் 4 வது பந்தில் நடராஜன் வீசிய பந்தை அடித்தார் வேட். அது அழகாக ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச்சாக மாறியது. இதன்மூலம் தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை பறித்தார்.

நடராஜனின் விக்கெட் வேட்டை ஸ்டார்ட் – டெஸ்ட்டில் அதிரடி விக்கெட்டுகள்

ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் இந்த சீசனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நெட் பவுலராக அழைத்துச் செல்லப்பட்ட நடராஜன் எதிர்பாராத விதமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார். வருண் சக்கரவர்த்திக்கு காயம் குணமடையாததால் அவர் இந்திய அணியில் இடம்பெற்றார்.

ஒருநாள் போட்டியில் ஒன்றில் மட்டுமே ஆடிய நடராஜன் 3 முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கினார். அதற்கு அடுத்த டி20 போட்டிகளிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன். நடராஜனின் விக்கெட் வேட்டை டெஸ்ட் போட்டியிலும் தொடர உள்ளது. அவரின் ரசிகர்கள் செம ஹேப்பி.

இதை அடித்து முடிக்கும் முன் நடராஜன் இன்னொரு விக்கெட்டையும் எடுத்து விட்டார். ஆம். லபுஷேன் சதம் அடித்து இந்திய அணிக்கு அச்சம் ஏற்படுத்தினார். அவர் விக்கெட்டைப் பறித்ததும் நடராஜனே.