T20 முதல் போட்டியில் நடராஜன் அசத்தல் – 2 விக்கெட்டுகள் வீத்தினார்

 

T20 முதல் போட்டியில் நடராஜன் அசத்தல் – 2 விக்கெட்டுகள் வீத்தினார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டித் தொடர் இன்று தொடங்கியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் தமிழகத்தின் நடராஜன் இடம்பிடித்துள்ளார். மேலும், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தரும் இடம்பிடித்தது டபுள் சந்தோஷம் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

T20 முதல் போட்டியில் நடராஜன் அசத்தல் – 2 விக்கெட்டுகள் வீத்தினார்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணி பேட்டிங் செய்கிறது. ஓப்பனிங் வீரர்களாக, கே.எல்.ராகுலும், ஷிகர் தவானும் களம் இறங்கினர். தொடக்கமே அதிர்ச்சி என்பதாக, தவான் 1 ரன் எடுத்த நிலையில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஆடமிழந்தார்.

வரிசையாக விக்கெட்டுகள் விழ, 20 ஓவர்கள் முடிகையில், 161 ரன்கள் எடுத்தது இந்திய கிரிக்கெட் அணி.

T20 முதல் போட்டியில் நடராஜன் அசத்தல் – 2 விக்கெட்டுகள் வீத்தினார்

162 எனும் எளிதான ஸ்கோரோடு ஆடி வருகிறது ஆஸ்திரேலியா அணி. அதில் ஓப்பனிங் இறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் ஸ்மித் விக்கெட்டுகளை சஹம் வீழ்த்தினார்.

எந்த நேரமும் போட்டியின் முடிவை மாற்றிவிடும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் வந்தவுடனே அவுட்டாக்கினார் தமிழக வீரர் நடராஜன். எல்.பி.டபுள்யூ முறையும் மேக்ஸ்வெல்லை ஆட்டமிழக்கச் செய்தார் நடராஜன்.

T20 முதல் போட்டியில் நடராஜன் அசத்தல் – 2 விக்கெட்டுகள் வீத்தினார்

அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன், டி20 யின் முதல் போட்டியிலேயே முக்கியமான பேட்ஸ்மேனை வீழ்த்தியிருக்கிறார். அதையெடுத்து ஓப்பனிங் இறங்கிய அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷார்ட் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் நடராஜன்.