“நடராஜன்தான் ஆட்டநாயகன்’ பெருமிதமாகச் சொல்லும் வீரர் இவர்தான்

 

“நடராஜன்தான் ஆட்டநாயகன்’ பெருமிதமாகச் சொல்லும் வீரர் இவர்தான்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆட திட்டமிட்டுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அதன் மூன்றாவது போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் டி20 போட்டித் தொடர் தொடங்கியது. அதில் முதல் டி20 போட்டியில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி வெல்ல பெரிதும் உதவியது. அதேபோல, நேற்று நடந்த இரண்டாம் டி20 போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 200க்கும் அதிகமான ரன்களைக் குவிக்கும் முனைப்பில் பேட்டிங்கைத் தொடங்கியது.

“நடராஜன்தான் ஆட்டநாயகன்’ பெருமிதமாகச் சொல்லும் வீரர் இவர்தான்

ஆனால், ஐந்தாவது ஓவரை வீச நடராஜன் வந்தார். அப்போது மூன்றாவது பந்தில் ஷார்ட் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன். இது ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிப்பதைத் தடுத்தது. அடுத்து ஹென்ரிக்யிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார் நடராஜன்.

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்வ் வடே இருவரும் நன்றாக ஆடியதால் 194 ரன்கள் எனும் ஸ்கோர் எடுத்தது. இதனை எதிர்கொள்ள களமிறங்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். இறுதியில் 22 பந்துகளில் 42 ரன்கள் விளாசி, அணியை வெற்றி பெறச் செய்தார் ஹிர்திக் பாண்டியா. இதனால், இந்தப் போட்டியை மட்டுமல்லாமல், டி20 போட்டித் தொடரையும் வென்றது இந்திய அணி.

“நடராஜன்தான் ஆட்டநாயகன்’ பெருமிதமாகச் சொல்லும் வீரர் இவர்தான்

ஹிர்திக் பாண்டியாவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “எனக்குப் பதில் நடராஜனுக்கு ஆட்ட நாயகன் விருதைக் கொடுத்திருக்கலாம். மற்ற பவுலர்கள் ரன்களை அதிகம் கொடுத்த நிலையில் நடராஜன்தான் குறைவான ரன்களைக் கொடுத்தார்” என்று நடராஜனைப் புகழ்ந்திருக்கிறார்.

“நடராஜன்தான் ஆட்டநாயகன்’ பெருமிதமாகச் சொல்லும் வீரர் இவர்தான்

பாண்டியா சொல்வது உண்மைதான். 4 ஓவர்கள் வீசிய நடராஜன் 20 ரன்களை மட்டுமே கொடுத்து, 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ரன் ஓவர் எகானாமி 5.00 தான். சென்ற போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சஹல் ஓவர் எகானமி 12.75. ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். 4 ஓவர்கள் வீசி 51 ரன்கள் வாரி வழங்கியிருந்தார்.