தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்பு – எப்படி?

 

தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்பு – எப்படி?

கிரிக்கெட் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரு பெயர் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வருகிறது. அது ‘நடராஜன்’ என்பதுதான். தமிழகத்தின் சேலம் அருகே உள்ள சின்ன கிராமத்திலிருந்து இன்று இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார் நடராஜன்.

ஆஸ்திரேலியா – இந்தியா ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோற்றிருந்தது. மூன்றாம் போட்டியில்தான் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுவும் ப்ளே ஆஃப் ஓவர்களில் விக்கெட் எடுத்த ஒரே பவுலர் நடராஜன் மட்டுமே.

தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்பு – எப்படி?

அதைத் தொடர்ந்து டி20 போட்டித் தொடரில் நடந்து முடிந்திருக்கும் 2 போட்டிகளிலும் தலா 2 விக்கெட்டுகளை அதிலும் முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கினார் நடராஜன். நேற்றைய போட்டியில் நடராஜனே ஆட்டநாயகன் என்று ஆட்டநாயகன் விருது பெற்ற ஹிர்திக் பாண்டியா சொல்லும் அளவுக்கு நடராஜனின் பங்களிப்பு இருந்தது. நடராஜன் இந்திய அணியின் சொத்து என்று கேப்டன் விராட் கோலி புகழ்ந்திருந்தார்.

இந்நிலையில் டி20 போட்டிகள் முடிந்ததும், ஆஸ்திரெலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதில் ஏற்கெனவே அறிவித்த அணியில் நடராஜன் இல்லை. ஆனால், மூத்த பவுலர் இஷாந்த் ஷர்மா பெயரும் இல்லை. காரணம், அவர் காயம் அடைந்திருப்பதால். என்றாலும், இஷாந்த் ஷர்மா காயம் குணமாகி விட்டால் டெஸ்ட் டீமில் சேர்க்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் அணியிலும் இடம்பிடிக்க வாய்ப்பு – எப்படி?

ஆனால், இப்போது வரை இஷாந்த் ஷர்மா காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்ததாகத் தெரியவில்லை. அதனால், அவர் ஆஸ்திரேலியா செல்வதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. எனவே, அவருக்குப் பதில் தமிழகத்தின் நடராஜன் டெஸ்ட் அணியில் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.

காத்திருக்கும் பவுலராக ஆஸ்திரேலிய டூரில் வந்த நடராஜன், ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடியதைப் போல டெஸ்ட் அணியிலும் இடம்பெறுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.