ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தின் நடராஜன்!

 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தின் நடராஜன்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் ஆடிவருகிறது. இந்தத் தொடரில் முதன் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது கூடுதல் பவுலராகவே தமிழகத்தின் நடராஜன் தங்கராசு. ஆனால், வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதால் டெஸ்ட் அணிக்குள் நுழைந்தார் நடராஜன். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், நடராஜனை வாழ்த்தி வரவேற்றார். ஏனெனில், வார்னர் கேப்டனாக இருந்த ஐபிஎல் அணியான சன்ரைசர் ஹைதராபாத் டீமில்தான் நடராஜன் யாக்கராக வீசி விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டிருந்தார்.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தின் நடராஜன்!

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சைனிக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதில் தமிழகத்தின் நடராஜன் ஆடுவார் எனச் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

கூடுதல் பவுலரிலிருந்து, டெஸ்ட் அணிக்குள் நுழைந்து, தற்போது ஒருநாள் அணிக்குள்ளும் இடம்பிடித்துவிட்டார் நடராஜன். ஆனால், இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் சைனி விளையாடி வருகிறார். 10 ஓவர்களையும் வீசி ஒரு விக்கெட்டையும் பறித்தார். ஆனால், ரன்களை வாரிக்கொடுத்தார். 10 ஓவர்களில் 83 ரன்களைக் கொடுத்திருந்தார்.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தின் நடராஜன்!

சைனிக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. வரலாம் வா… வரலாம் வா நட்டி.