டெஸ்ட் போட்டிலும் களம் இறங்கிய தமிழகத்தின் நடராஜன் – குவியும் பாராட்டு

 

டெஸ்ட் போட்டிலும் களம் இறங்கிய தமிழகத்தின் நடராஜன் – குவியும் பாராட்டு

பலரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகி இருக்கும் அற்புதமான நாள் இன்று. ஆம், தமிழகத்தின் அடையாளம் நடராஜன் டெஸ்ட் போட்டியிலும் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருக்கின்றன. ஒரு போட்டி டிராவாகி உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருகிறார்கள்.

டெஸ்ட் போட்டிலும் களம் இறங்கிய தமிழகத்தின் நடராஜன் – குவியும் பாராட்டு

மூன்றாம் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் அடைந்தார். அதனால், தமிழகத்தின் நடராஜன் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றே பலரால் கணிக்கப்பட்டது. ஆனால், இன்று ஆடும் 11 அணியில் இடம்பிடித்து விட்டார் நடராஜன். அதனால் கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களிடமிருந்தும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார் நடராஜன்.

ஆஸ்திரேலியா – இந்தியா மோதும் இந்த சீசனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நெட் பவுலராக அழைத்துச் செல்லப்பட்ட நடராஜன் எதிர்பாராத விதமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார். வருண் சக்கரவர்த்திக்கு காயம் குணமடையாததால் அவர் இந்திய அணியில் இடம்பெற்றார்.

டெஸ்ட் போட்டிலும் களம் இறங்கிய தமிழகத்தின் நடராஜன் – குவியும் பாராட்டு

நடராஜன் ஒருநாள் அணியில் இருந்தாலும் முதல் இரு போட்டிகளில் ஆட விடவில்லை. மூன்றாம் போட்டியில் களமிறங்கிய நடராஜன் 3 முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கினார். அதற்கு அடுத்த டி20 போட்டிகளிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன்.

தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. ஆனால், வார்னர் இந்த போட்டியிலும் சொற்ப ரன்னில் (1 ரன் மட்டுமே) அவுட்டானர்.

ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களோடு ஆடி வருகிறது.