ஆக்சிஜன் வாயுக்கசிவு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

 

ஆக்சிஜன் வாயுக்கசிவு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் இன்று மதியம் 22 நோயாளிகள் உயிரிழந்தனர். மருத்துவமனையின் டேங்கர் லாரியிலிருந்து சிலிண்டருக்கு ஆக்சிஜன் மாற்றும்போது கசிவு ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பணி நடைபெற்றது. அந்த மருத்துவமனையில் 170க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின் ஆக்சிஜன் கசிவு சீர்செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆக்சிஜன் வாயுக்கசிவு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

இதனிடையே நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக, உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரிவர ஆக்ஸிஜன் வழங்க முடியாததால் அங்குள்ள நோயாளிகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன