Home மாவட்டங்கள் தஞ்சாவூர் தஞ்சை மாணவர் தயாரித்த எடை குறைந்த செயற்கைக்கோள்களை, 2021ல் விண்ணில் அனுப்பும் நாசா...

தஞ்சை மாணவர் தயாரித்த எடை குறைந்த செயற்கைக்கோள்களை, 2021ல் விண்ணில் அனுப்பும் நாசா…

தஞ்சாவூர்

தஞ்சையை சேர்ந்த பி.டெக் மாணவர் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களை அடுத்து ஆண்டு விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்தீன். இவர், தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் “ஐ டூடுல் லேர்னிங்” நிறுவனமும், நாசா அமைப்பும் இணைந்து நடத்திய 2019-20 ஆம் ஆண்டிற்கான “க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்” என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் கலந்துகொண்டார்.

சுமார் 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில், ரியாஸ்தீன் வடிமைத்துள்ள உலகின் மிகவும் எடைகுறைவான இரு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவ தேர்வாகி உள்ளது. விஷன் சாட் வி1 மற்றும் வி2 என பெயரிட்டுள்ள இந்த இரு செயற்கைக்கோள்களும் சுமார் 37 மில்லிமீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டதாகும். இவை உலகிலேயே மிகவும் எடை குறைவான ஃபெம்டோ வகையை சேர்ந்த செயற்கைக்கோள்களாகும்.

தெர்மோ பிளாஸ்டிக்கினால் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த செயற்கைக்கோளில், 11 சென்சார்கள் உள்ளன. அதன் மூலம் 17 பாரா மீட்டர்களை கண்டறிய முடியும். இவை இரண்டும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவின் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் பலி!

ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...

பேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு… பஸ் ஸ்டிரைக் தொடரும்!

அரசுடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை, தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை, ஓய்வூதியப் பலன்கள் முறையாகச் செலுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளை அரசு தீர்க்காததால் போக்குவரத்து...

பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுனரால் நேர்ந்த விபத்து!

கடலூர் அருகே தற்காலிக ஓட்டுனரை வைத்து பேருந்தை இயக்கியதால் விபத்து நேர்ந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்...

இனி இந்தப் பிழை எந்த வடிவத்திலும் நேரக்கூடாது.. வைரமுத்து வேண்டுகோள்

சி.பி.எஸ்.,இ. 8ம் வகுப்பு பாட புத்தகத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. திருவள்ளுவர் புகைப்படம் தலையில் முடி இல்லாமல் வழுக்கை தலையுடன் உச்சியில் குடுமி வைத்து,...
TopTamilNews