தலித்துகள் குறித்து கவலை கிடையாது.. ஆனால் சொந்த ஆதாயம் பெற ஆர்வம்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

தலித்துகள் குறித்து கவலை கிடையாது.. ஆனால் சொந்த ஆதாயம் பெற ஆர்வம்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் பேசியதை குறிப்பிட்டு, தலித்துக்களை பாதுகாப்பதில் ஆர்வம் கிடையாது, சொந்த ஆதாயம் பெறுவதில்தான் காங்கிரசுக்கு அக்கறை என அந்த கட்சியை பா.ஜ.க. அமைச்சர் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர், ஹத்ராஸ் பாலியல் பலாத்கார மற்றும் கொலை சம்பவத்தை பயன்படுத்தி அம்மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்துவது தொடர்பான தனது திட்டத்தை விளக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலித்துகள் குறித்து கவலை கிடையாது.. ஆனால் சொந்த ஆதாயம் பெற ஆர்வம்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்
நரோட்டம் மிஸ்ரா

காங்கிரஸின் கை கலகக்காரர்களிடம் உள்ளது. அவர்கள் தலித்துக்களை பற்றி கவலைப்படுவதில்லை, சொந்த நலனில் பற்றி கவலைப்படுகிறார்கள். இந்தியாவை உடைக்க முயற்சிக்கும் சக்திகளுடன் காங்கிரஸ் எப்போதும் நின்று கொண்டிருக்கிறது. ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை முதலில் சந்தித்தவர் ராகுல் காந்தி. தற்போது ராகுல் காந்தியின் ஹத்ராஸ் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் முதலில் கலவரத்தை ஏற்படுத்துவோம் அதன் பிறகு ராகுல் காந்தி வருவார் என அந்த மனிதர் (வீடியோவில் பேசியது) தெளிவாக கூறுகிறார்.

தலித்துகள் குறித்து கவலை கிடையாது.. ஆனால் சொந்த ஆதாயம் பெற ஆர்வம்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்
ராகுல் காந்தி

சாதி அடிப்படையில் நாட்டை பிரிக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆட்சிக்கு வந்ததும் 10 நாட்களில் கடனை தள்ளுபடி செய்வோம், 15 நிமிடத்தில் சீனாவை வெளியேற்றுவோம் என ராகுல் கூறுகிறார். அவருக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு நான் தலைவணங்குகிறேன். அத்தகைய உயர்தர மருந்துகளை அவர் எங்கிருந்து பெறுகிறார்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.