நான் நேற்று அப்படி பேசியது தவறுதான்… வருத்தம் தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர்… மாஸ்க் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

நான் நேற்று அப்படி பேசியது தவறுதான்… வருத்தம் தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர்… மாஸ்க் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

மாஸ்க் அணியமாட்டேன் என நான் சொன்னது தவறுதான் அதற்கு வருந்துகிறேன் என மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநில உள்துறை அமைச்சராக இருப்பர் நரோட்டம் மிஸ்ரா. அவர் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது அவர் மாஸ்க் அணியாமல் இருந்தார். அந்த கூட்டத்தில் மற்ற பா.ஜ.க. தலைவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தனர்.

நான் நேற்று அப்படி பேசியது தவறுதான்… வருத்தம் தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர்… மாஸ்க் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
நரோட்டம் மிஸ்ரா

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிடம் மாஸ்க் அணியாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் நான் மாஸ்க் அணியமாட்டேன் அதனால் என்ன? என்று சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தார். ஒரு மாநில அமைச்சரே மாஸ்க் அணியமாட்டேன் என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்சையை தொடர்ந்து, நரோட்டம் மிஸ்ரா நேற்று முன்தினம் டிவிட்டரில், தன்னால் நீண்ட நேரம் மாஸ்க் அணிய முடியாது என்பதை காரணத்துடன் (உடல் நலம்) பதிவு செய்தார்.

நான் நேற்று அப்படி பேசியது தவறுதான்… வருத்தம் தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர்… மாஸ்க் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
பிரதமர் மோடி

இந்த சூழ்நிலையில் நேற்று மாஸ்க் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தற்கு வருத்தம் தெரிவித்து நரோட்டம் மிஸ்ரா தான் பேசிய வீடியோ ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர், சில நேரங்களில் நாம் கவனக்குறைவாக ஏதாவது பேசுகிறோம், அது நம் உணர்வுகளுக்கு ஏற்ப செல்லாது. முககவசம் (அணிவது) தொடர்பாக நான் நேற்று (நேற்று முன்தினம்) பேசிய வார்த்தைகள் முற்றிலும் தவறானது. மரியாதைக்குரிய பிரதமர் மோடியின் உணர்வுகளுக்கு நேர்மாறான எனது சொந்த வார்த்தைகளால் நான் மிகவும் வேதனையை அடைந்தேன். எனது அறிக்கைக்கு வருந்துகிறேன். அனைத்து மக்களும் முககவசம் அணியுங்கள் மற்றும் கோவிட் தொடர்பான பாதுகாப்பு கடைப்பிடியுங்க என வேண்டுகோள் விடுக்கிறேன் என பேசியிருந்தார்.