பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்

பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார் குற்றம் சாட்டுவார்கள் என்று பா.ஜ.க. அமைச்சர் கிண்டல் அடித்தார்.

மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கொஞ்சம் அதிரடியாக பேசக் கூடியவர். மேலும் ராகுல் காந்தியையும். காங்கிரசையும் கிண்டலடித்து பேசுவதில் அவருக்கு அப்படி ஒரு ஆனந்தம். அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தியை சீண்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தி கடலில் நீந்தியதை மிஸ்ரா கிண்டல் அடித்துள்ளார்.

பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்
நரோட்டம் மிஸ்ரா

நரோட்டம் மிஸ்ரா இது தொடர்பாக கூறியதாவது: வித்தியாசத்தை பாருங்கங்கள். மோடி ஜி தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்தில் அமித் ஷாஜி, நடாஜி அசாமிலும், ராஜ்நாத் சிங் கேரளாவிலும் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடிக்கிறார். கடைசியில் அவர்கள் (காங்கிரஸ்) மின்னணு வாக்கு எந்திரம் சரியில்லை என்று குற்றம் கூறுவார்கள்.

பப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்
காங்கிரஸ்

வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில், மீன சமுதாயத்தினரிடம் கலந்து உரையாடினார். மேலும் அவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று வந்தார். கடலில் படகில் சென்று கொண்டு இருந்த ராகுல் காந்தி திடீரென படகிலிருந்து கடலுக்குள் குதித்தார். சுமார் 10 நிமிடங்கள் கடலுக்குள் நீந்திய ராகுல் காந்தி பின்பு படகில் ஏறினார். இதனைத்தான் நரோட்டம் மிஸ்ரா கிண்டல் அடித்தார்.