காந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு

 

காந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு

காங்கிரஸை புதுப்பிக்க முடியாது, காந்திஜி கூட கட்சியை கலைக்க சொன்னார் என்று அந்த கட்சியை நரோட்டம் மிஸ்ரா விமர்சனம் செய்தார்.

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பீகார் தேர்தல் தோல்விக்கு கட்சியின் மோசமான செயல்பாடுதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், ப சிதம்பரம் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.

காந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு
நரோட்டம் மிஸ்ரா

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பீகார் தேர்தல் தோல்வி குறித்து கூறுகையில், 5 நட்சத்திர கலாச்சாரத்தால் தேர்தல்கள் வெல்லப்படுவதில்லை. கட்சி அலுவலகர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். குலாம் நபி ஆசாத்தின் கருத்து குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச உள்துறை அமைச்சருமான நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காந்திஜி கூட காங்கிரஸ் கட்சியை கலைக்க சொன்னார்… நரோட்டம் மிஸ்ரா தாக்கு
காங்கிரஸ்

காங்கிரஸ் இறந்து கொண்டு இருக்கிறது என்று நாங்கள் நீண்ட காலமாக கூறியுள்ளோம். இறுதியாக ஆசாத் ஜி, கபில் சிபல் ஜி மற்றும் ப சிதம்பரம் ஜி இதை சொல்லி விட்டார்கள். ஆனால் காங்கிரஸை புதுப்பிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சி பொருத்தமற்றதாகி விட்டதால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸை மகாத்மா காந்தி விரும்பினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.