ஈ.வி.எம். மீதான திக்விஜய சிங்கின் பயம் ம.பி.யில் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என்பதை குறிக்கிறது.. மிஸ்ரா

ஈ.வி.எம். மீதான திக்விஜய சிங்கின் பயம் ம.பி.யில் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என்பதை குறிக்கிறது.. மிஸ்ரா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ஈ.வி.எம்.) மீதான திக்விஜய சிங்கின் பயம் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என்பதை குறிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியாகும். இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய சிங் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பினார்.

ஈ.வி.எம். மீதான திக்விஜய சிங்கின் பயம் ம.பி.யில் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என்பதை குறிக்கிறது.. மிஸ்ரா
நரோட்டம் மிஸ்ரா

இந்த தொழில்நுட்ப காலத்தில், வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்.) நம்பவில்லை. ஆனால் இந்தியாவிலும் மற்றும் சில சிறிய நாடுகளிலும் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி நடத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகள் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை? ஏனென்றால் அதனுடன் சிப்பை வைத்து ஹேக் செய்யலாம் என திக்விஜய சிங் டிவிட்டரில் பதிவு செய்து இருந்தார்.

ஈ.வி.எம். மீதான திக்விஜய சிங்கின் பயம் ம.பி.யில் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என்பதை குறிக்கிறது.. மிஸ்ரா
திக்விஜய சிங்

இதற்கு தொடர்பாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், ஈ.வி.எம்.களில் சிக்கல் இருப்பதாகவும், நிர்வாக இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று திக்விஜய சிங் கூறுவது, பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என்பதையும் அவர்கள் சாக்கு போக்குகளை தேடுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒருபோதும் அரசியலமைப்பு அமைப்புகளை நம்ப மாட்டார்கள். எனவே வாக்காளர்கள் அவர்களை நம்புவதை நிறுத்தி விட்டார்கள் என்று தெரிவித்தார்.