இந்தியாவில் ஒரு கட்சி ஒரு குழந்தையை பிரதமராக்க வேலை செய்கிறது… காங்கிரஸை கிண்டல் செய்த பா.ஜ.க. அமைச்சர்

இந்தியாவில் ஒரு கட்சி ஒரு குழந்தையை பிரதமராக்க வேலை செய்கிறது… காங்கிரஸை கிண்டல் செய்த பா.ஜ.க. அமைச்சர்

இந்தியாவில் ஒரு கட்சி ஒரு குழந்தையை பிரதமராக்க வேலை செய்கிறது என்று காங்கிரஸை மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கிண்டல் அடித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், வேளாண் சட்டங்கள் குறித்து பரப்படும் தவறான தகவல்களுக்கு பதிலடியாக வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டத்தை பா.ஜ.க. நடத்தியது. அதில் கலந்து கொண்ட அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது: இந்த போராட்டம் டெல்லியில் ஏன் நடக்கிறது? பழைய வேளாண் சட்டங்கள் சரியென்றால், ஏன் விவசாயிகள் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கடன் சுமையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக புதிய வேளாண் சட்டங்கள் உள்ளன.

இந்தியாவில் ஒரு கட்சி ஒரு குழந்தையை பிரதமராக்க வேலை செய்கிறது… காங்கிரஸை கிண்டல் செய்த பா.ஜ.க. அமைச்சர்
நரோட்டம் மிஸ்ரா

காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று ஆலோசனைகள் நடந்தது. அவர்கள் தவறான புரிதல்களை உருவாக்குகின்றனர். இந்த கட்சி தேசவிரோத சக்திகள் கொண்டது. ஒவ்வொரு போராட்டத்தின்போது அவர்கள் ஒரு தவறான புரிதல்களை உருவாக்குவதுதான் அவர்கள் வேலை. வாட்ஸ்அப்பில் எனக்கு பார்வேர்டு செய்தி வந்தது. அதில் கைகேயிக்கு பிறகு தனது மகனுக்காக ராஜாவின் சிம்மாசனத்தை பாதுகாக்க (பிரதமர் பதவி) சதி செய்த தாய் (சோனியா காந்தி) யார்? என்று கேள்வி கேட்டு இருந்தது.

இந்தியாவில் ஒரு கட்சி ஒரு குழந்தையை பிரதமராக்க வேலை செய்கிறது… காங்கிரஸை கிண்டல் செய்த பா.ஜ.க. அமைச்சர்
சோனியா காந்தி

ஒரு நிலையான டெக்கில் எத்தனை அட்டைகள் இருக்கும் என்று கேள்வி கேட்டு இருந்தது. அதற்கு பதில் 52 ஆகும். இந்த கட்சி (காங்கிரஸ்) 52 எம்.பி.க்கள் உள்ளனர் (மக்களவையில்). ஆச்சரியப்படும் விதமாக ஒரு ஜோக்கரும் (கட்சியில்) உள்ளது. எனக்கு வந்த மற்றொரு வாட்ஸ்அப் பார்வேர்டு தகவலில், ஜப்பானில் தினமும் ஒரு குழந்தையை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஒரு ரயில் நிறுத்தப்படும் என்று கூறியது. ஆனால் இந்தியாவில் ஒரு கட்சி ஒரு குழந்தையை (ராகுல் காந்தி) பிரதமராக்க வேலை செய்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.