புதிய கல்வி கொள்கையால் சர்வதேச கல்வி மையமாக இந்திய மாறும்: பிரதமர் மோடி

 

புதிய கல்வி கொள்கையால் சர்வதேச கல்வி மையமாக இந்திய மாறும்: பிரதமர் மோடி

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவைக் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழ்நாட்டில் தொடங்கி நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இது வரைவுதான், மக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. அப்படி என்ன என்ன மாற்றம் செய்யப்பட்டது என்ற எந்த அறிவிப்பும் இன்றி, கடந்த மாதம் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிய கல்வி கொள்கையால் சர்வதேச கல்வி மையமாக இந்திய மாறும்: பிரதமர் மோடி

இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, “இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டில் எதிர்காலமே. புதிய கல்விக் கொள்கையானது இந்திய கல்வியை சர்வதேச கல்வி மையமாக மாற்றும். சிறப்பாக செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகள் தொடங்க ஊக்கமளிக்கப்படும் . மாணவர்களே! உங்களின் கனவுகளே இந்தியாவை உருவாக்கப்போகிறது. எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது” எனக் கூறினார்.