எனது அடுத்த திட்டம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- மோடி அதிரடி

 

எனது அடுத்த திட்டம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- மோடி அதிரடி

காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட அரசியலமைப்பு தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

நவம்பர் 26 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பெரு விழாவாகக் கொண்டாடப்படும் இந்த தினம் கொரோனாவால் இந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் கொண்டாடப்பட்டது. இதில் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற அதிகாரிகள் மற்றும் அகில இந்திய தலைமை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதனையே இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

எனது அடுத்த திட்டம் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- மோடி அதிரடி

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார். ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் ஒரே நாடு ஒரே மார்க்கெட், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற என்பதனை வலியுறுத்தி பேசியுள்ளார். மேலும் மக்களவை சட்டமன்ற மற்றும் பஞ்சாயத்து தேர்தல் அனைத்திற்கும் ஒரே வாக்காளர் பட்டியல் அமைக்க வேண்டும் எனவும் மோடி கூறினார்