சீன விவகாரத்தில் நேரு செய்த அதே தவறுகளை மோடியும் செய்துள்ளார்…. சிவ சேனா குற்றச்சாட்டு..

 

சீன விவகாரத்தில் நேரு செய்த அதே தவறுகளை மோடியும் செய்துள்ளார்…. சிவ சேனா குற்றச்சாட்டு..

சிவ சேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவுடனான நமது உறவுகள் பாகிஸ்தானை காட்டிலும் எப்போதும் மிகவும் கவலைக்குரியது. மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தபோது, சீனாவை இந்தியாவுக்கு ஒரு பெரிய எதிரி என்று குறிப்பிட்டார். சீனாவின் தூண்டுதலால் நம் எல்லைகளில் அருகில் உள்ள நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நமக்கு எதிராக முஷ்டியை உயர்த்துகின்றன. இதற்கு காரணம் பாரத பிரதமர்கள் மற்றும் மற்றவர்கள் உலக தலைவர்களாக மாற முயற்சி செய்தது மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுடன் நட்பு ரீதியான உறவுகளில் கவனம் செலுத்தினர். அதேநேரத்தில் நமது அருகில் உள்ள அண்டை நாடுகளுடான உறவை புறக்கணித்தனர்.

சீன விவகாரத்தில் நேரு செய்த அதே தவறுகளை மோடியும் செய்துள்ளார்…. சிவ சேனா குற்றச்சாட்டு..

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்பு ஒரு முறை கூறுகையில், நம்மால் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தி முடியும் ஆனால் புவியியலில் அல்ல என கூறினார். துரதிருஷ்டவசமாக, சீனா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நமது அண்டை நாடுகளுடான நம் உறவு நம்பிக்கையற்றதாக உள்ளது, நமது எல்லைகள் எப்போதும் பதற்றமாகவே உள்ளது. துரதிருஷ்டவசமாக, சீனாவை கையாளும்போது ஜவஹர்லால் நேரு செய்த அதே தவறைத்தான் மோடியும் செய்கிறார். சீன அதிபர் அகமதாபாத் வருகை என்பது நமது எல்லையில் சீனா கால் வைப்பது என்பது அர்த்தம் அல்ல. நேரு காலத்தை போன்று சீனா இப்போதும் நமக்கு துரோகம் செய்துள்ளது.

சீன விவகாரத்தில் நேரு செய்த அதே தவறுகளை மோடியும் செய்துள்ளார்…. சிவ சேனா குற்றச்சாட்டு..

மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு தனது முரண்பாடுகளால் தானாகவே கவிழும் என்பது பா.ஜ.க.வின் பகல் கனவு. மகாராஷ்டிரா அரசு நிலையாக உள்ளது மற்றும் கவிழ்க்க முடியாது. அரசை கவிழ்ப்பது குறித்து பா.ஜ.க. தொடர்ந்து கனவு காணலாம். அரசு தனது 5 ஆண்டு ஆட்சி காலத்தை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.