• March
    29
    Sunday

Main Area

Main



பதவிக்காலம் சிறக்க வாழ்த்துகள்: ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து

narendra modi
narendra modi

டெல்லி: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்படுவாரா? இல்லை இளம் தலைவர் சச்சின் பைலட்தேர்வு செய்யப்படுவாரா? என்ற குழப்பம் நிலவி வந்த சூழலில் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பதவிக்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.