2ஆம் அலையால் உருக்குலைந்த இந்தியா… தூக்கி நிறுத்த அதிரடி சலுகைகளை அறிவிக்கும் மோடி அரசு!

 

2ஆம் அலையால் உருக்குலைந்த இந்தியா… தூக்கி நிறுத்த அதிரடி சலுகைகளை அறிவிக்கும் மோடி அரசு!

கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் இந்தியா சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. இதனால் பல்வேறு துறைகள் அடிவாங்கியிருக்கின்றன. அந்தத் துறைகளை மீண்டெழ செய்யும் வகையில் மற்றொரு சலுகை திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா முதல் அலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஊரடங்கு நீடித்தது. பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. முதல் அலையில் தப்பித்த இந்தியாவில் பொருளாதாரம் V வடிவ வளர்ச்சியைக் காணும் என நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் அறிவித்தன.

2ஆம் அலையால் உருக்குலைந்த இந்தியா… தூக்கி நிறுத்த அதிரடி சலுகைகளை அறிவிக்கும் மோடி அரசு!

ஆனால் அந்த வளர்ச்சியை இரண்டாம் அலை முற்றிலுமாக நீர்த்து போக செய்துள்ளது என்பதே உண்மை. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய தொழில் வர்த்தக மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயங்கரமான கொரோனா தாக்குதலுக்குள்ளாகின. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அதேபோல மக்களுக்கும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் நுகரும் தன்மை குறைந்து பொருளாதாரம் பலத்த அடி வாங்கியது.

2ஆம் அலையால் உருக்குலைந்த இந்தியா… தூக்கி நிறுத்த அதிரடி சலுகைகளை அறிவிக்கும் மோடி அரசு!

இதையெல்லாம் கருத்தில் கொண்டு சில வாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி நாட்டின் பணப்புழக்கத்திற்காக ரூ.50 ஆயிரம் கோடி சலுகை திட்டத்தை அறிவித்தது. சிறு, குறு தொழிற்சாலைகளுக்கும் தனிநபர்களுக்கும் கடன் பெறுவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சலுகைகளை அறிவித்தது. அதேபோல மத்திய அரசுக்கு உபரி நிதியாக சுமார் 1 லட்சம் கோடியை வழங்கியது. இதையொட்டியே மீண்டும் ஒரு நிவாரண திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த வருடம் ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரண திட்டம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.