சோனியா காந்தியே என்னை தேர்தலில் போட்டியிட சொன்னார்.. ஆனால் நான்தான் மறுத்து விட்டேன்.. நாராயணசாமி தகவல்

சோனியா காந்தியே என்னை தேர்தலில் போட்டியிட சொன்னார்.. ஆனால் நான்தான் மறுத்து விட்டேன்.. நாராயணசாமி தகவல்

சோனியா காந்தியே என்னை தேர்தலில் போட்டியிட சொன்னார் ஆனால் நான்தான் மறுத்து விட்டேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்வரும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை. அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தியின் பேச்சை தவறாக மொழிமாற்றம் செய்ததன் காரணமாக காங்கிரஸ் தலைமை நாராயணசாமிக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை. அதனால்தான் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

சோனியா காந்தியே என்னை தேர்தலில் போட்டியிட சொன்னார்.. ஆனால் நான்தான் மறுத்து விட்டேன்.. நாராயணசாமி தகவல்
காங்கிரஸ்

ஆனால் இந்த தகவலை நாராயணசாமி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: சில ஊடக அறிக்கைகள், நான் தேர்தலில் போட்டியிடவில்லை ஏனென்றால் எனக்கு கட்சி தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளன. இது உண்மையல்ல. தேர்தலில் போட்டியிடுமாறு சோனியா காந்தி என்னிடம் கேட்டார்.

சோனியா காந்தியே என்னை தேர்தலில் போட்டியிட சொன்னார்.. ஆனால் நான்தான் மறுத்து விட்டேன்.. நாராயணசாமி தகவல்
சோனியா, ராகுல் காந்தி

அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய வேண்டியது இருப்பதால் சோனியா காந்தியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தேன். மேலும், எங்களது புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஆகையால், நான் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். இதனை மனதில் வைத்து நான் தேர்தலில் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.