வரலாற்றுப் பிழையை தமிழிசை செய்துள்ளார்- முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

 

வரலாற்றுப் பிழையை தமிழிசை செய்துள்ளார்- முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரியில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா 14 எம்.எல்.ஏ.க்களுடன் சமபலத்தில் உள்ளது. இதனிடையே வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி, புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். மேலும், பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்யவும் ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

வரலாற்றுப் பிழையை தமிழிசை செய்துள்ளார்- முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை கடிதம் தந்துள்ளார். அந்த கடித்தத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பதிவேட்டில் நியமன எம்எல்ஏக்களை பாஜக என குறிப்பிடவில்லை. நியமன எம்எல்ஏக்களை பாஜக என சபாநாயகரும் அங்கீகரிக்கவில்லை. ஆதலால் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்க ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதுகுறித்துசபாநாயகரிடமும் பேசுவேன்” எனக் கூறினார்.