மக்களின் உணர்வுகளை மதிக்காத கிரண்பேடிக்கு இது தேவைதான் – நாராயணசாமி

 

மக்களின் உணர்வுகளை மதிக்காத கிரண்பேடிக்கு இது தேவைதான் – நாராயணசாமி

புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சரான நமச்சிவாயம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல்வர் நாராயணசாமிஅரசு கவிழும் நிலையில் உள்ளது. இப்படி புதுச்சேரி அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறி கொண்டே இருக்கின்றனர். இந்த சூழலில் ஆளுங்கட்சியானபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆளுநராக தற்போதைய தெலுங்கானா ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் கூடுதலாக பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மக்களின் உணர்வுகளை மதிக்காத கிரண்பேடிக்கு இது தேவைதான் – நாராயணசாமி

இந்நிலையில் ஆளுநர் நீக்கம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “எங்களின் தொடர் போராட்டத்திற்கு பின் கிரண்பேடியை மாற்றியதை வரவேற்கிறோம். புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண்பேடி தன்னிச்சையாக செயல்பட்டார்” என தெரிவித்துள்ளார். இதேபோல் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, “புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது வரவேற்கத்தக்கது” என கருத்து தெரிவித்துள்ளார்.