முதலில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், அரசியல்வாதிகளும் கொரோனா தடுப்பூசியை போட வேண்டும்- நாராயணசாமி

 

முதலில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், அரசியல்வாதிகளும் கொரோனா தடுப்பூசியை போட வேண்டும்- நாராயணசாமி

மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுவதற்கு அரசியல்வாதிகளுக்கு முதற்கட்டமாக தடுப்பு ஊசி போட பிரதமருக்கு நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தடுப்பூசி போடும் மையங்கள் தயார் நிலையிலுள்ளன, முதல் கட்டமாக சுமார் 14 ஆயிரம் நபர்களுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதாகவும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் மாநில நிதியில் இருந்து இலவசமாக அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், அரசியல்வாதிகளும் கொரோனா தடுப்பூசியை போட வேண்டும்- நாராயணசாமி

அதன்படி, முதற்கட்டமாக கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்திக்கொள்ளக்கூடாது என பிரதமர் கூறியுள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு ஊசி தயக்கமின்றி போடுவதற்கு முதற்கட்டமாக அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதற்கட்டமாக செலுத்த வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளதாக நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மாநில முதலமைச்சர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “அனைத்து மாநிலங்களிலும் 3 கோடி சுகாதார பணியாளர்கள் உள்ளனர். முதற்கட்டமாக அவர்களுக்கு தடுப்பூசி போடும் செலவை மாநில அரசு ஏற்க வேண்டியதில்லை. மத்திய அரசு ஏற்று கொள்ளும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது” எனக் கூறினார்.