தாக்கரேவுக்கு முதல்வராவதற்கு எந்த தகுதியும் கிடையாது.. ஜி.டி.பி. குறித்து அவருக்கு என்ன தெரியும்?.. பா.ஜ.க.

 

தாக்கரேவுக்கு முதல்வராவதற்கு எந்த தகுதியும் கிடையாது.. ஜி.டி.பி. குறித்து அவருக்கு என்ன தெரியும்?.. பா.ஜ.க.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அதற்கான தகுதிகள் கிடையாது. ஜி.டி.பி. அல்லது பொருளாதாரம் குறித்து அவருக்கு என்ன தெரியும் என பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நாராயண் ரானே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே கடந்த சில தினங்களுக்கு முன் தசரா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கவர்னர் பகத் சிங் கோஷ்யரி, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நடிகை கங்கனா ரனாவத் ஆகியோரை பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் நாராயண் ரானே கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவ சேனா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரும் அவரை மதிப்பதில்லை. அவர் ஒரு முட்டாள் முதல்வர்.உத்தவ் தாக்கரே முதல்வராவதற்கு எந்த தகுதிகளும் இல்லை.

தாக்கரேவுக்கு முதல்வராவதற்கு எந்த தகுதியும் கிடையாது.. ஜி.டி.பி. குறித்து அவருக்கு என்ன தெரியும்?.. பா.ஜ.க.
முதல்வர் உத்தவ் தாக்கரே

அவர் செயலாளர்களின் பேச்சை கேட்பதில்லை. இதனால் விவசாயிகள், விவசாயம், பொருளாதாரம் கல்வி அல்லது கொரோனா தொற்றுநோய் பிரச்சினையாக இருந்தாலும் அரசு எங்கு செல்கிறது என்பதை நாம் பார்க்கலாம். அவர் தன்னைத்தானே புலி என்று சொல்லி கொள்கிறார். ஆனால் வீட்டே விட்டு ஒரு போதும் வெளியே சென்றதில்லை. அவர் கூண்டில் அடைக்கப்பட்ட புலியா அல்லது வெளியே திரியும் ஒன்றா? மகாராஷ்டிராவில் கோவிட்-19ஆல் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர், இது நாட்டிலே அதிகபட்சம். இது குறித்து அவர் என்ன செய்தார்.

தாக்கரேவுக்கு முதல்வராவதற்கு எந்த தகுதியும் கிடையாது.. ஜி.டி.பி. குறித்து அவருக்கு என்ன தெரியும்?.. பா.ஜ.க.
சிவசேனா

ஜி.டி.பி. அல்லது பொருளாதாரம் குறித்து அவருக்கு என்ன தெரியும்? அரசியலமைப்பு மற்றும் அதன் சட்டங்கள் குறித்து அவருக்கு தெரியுமா. ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை மாநிலம் பெறுவதில் தாமதமாகலாம். இது போன்ற விஷயங்களை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எழுப்ப வேண்டும். மாநிலம் தனது சொந்த வளத்தின் வாயிலாக நிதி திரட்டும் திறன் கொண்டுள்ளது. மிகவும் தெளிகாக இருங்க, சி.பி.ஐ. இன்னும் சுஷாந்த் வழக்கை விசாரித்து வருகிறது. அது வழக்கை மூடவில்லை. திஷா சாலியன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு அமைச்சர் அது முதல்வரின் மகன் உள்ளே(சிறை) செல்லுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். நாராயண் ரானே முன்பு சிவ சேனா கட்சியில் இருந்தவர் மற்றும் சிவ சேனா முதல்வராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.