நான் உங்களுக்கு (சிவ சேனா) பயப்படவில்லை… மேற்கு வங்கம் போன்ற சூழலை உருவாக்க அனுமதிக்க மாட்டேன்.. ரானே ஆவேசம்

 

நான் உங்களுக்கு (சிவ சேனா) பயப்படவில்லை… மேற்கு வங்கம் போன்ற சூழலை உருவாக்க அனுமதிக்க மாட்டேன்.. ரானே ஆவேசம்

நான் உங்களுக்கு (சிவ சேனா) பயப்படவில்லை, மகாராஷ்டிராவில் மேற்கு வங்கம் போன்ற சூழலை உருவாக்க அனுமதிக்க மாட்டேன் என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நாராயண் ரானே கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை ஒரு மாநில முதலமைச்சர் அறியாதது வெட்கக்கேடான செயல். அவர் உரையாற்றிய இடத்தில் நான் இருந்திருந்தால் தாக்கரேவின் கன்னத்தில் ஓங்கி அறை கொடுத்திருப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக மத்திய அமைச்சர் நாராயன் ரானேவை நேற்று முன்தினம் மாலையில் போலீசார் கைது செய்தனர். இருப்பினும் நள்ளிரவில் அவர் பெயில் வெளியே வந்தார். நாராயண் ரானே நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

நான் உங்களுக்கு (சிவ சேனா) பயப்படவில்லை… மேற்கு வங்கம் போன்ற சூழலை உருவாக்க அனுமதிக்க மாட்டேன்.. ரானே ஆவேசம்
சிவ சேனா

நான் உங்களுக்கு (சிவ சேனா) பயப்படவில்லை. என் கட்சி தலைவர்கள் என் பின்னால் நிற்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மக்கள் ஆசிர்வாதம் யாத்திரை மீண்டும் தொடங்கும். மகாராஷ்டிராவில் மேற்கு வங்கம் போன்ற சூழலை உருவாக்க அனுமதிக்க மாட்டேன். சிவ சேனாவை பரப்புவதிலும் அதை பெரிதாக்குதவதிலும் எனக்கு பெரிய பங்கு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். மும்பை உயர் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக (சிவ சேனா தொடர்ந்தது) தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்துள்ளது. இது நாடு சட்டங்களால் நடத்தப்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

நான் உங்களுக்கு (சிவ சேனா) பயப்படவில்லை… மேற்கு வங்கம் போன்ற சூழலை உருவாக்க அனுமதிக்க மாட்டேன்.. ரானே ஆவேசம்
உத்தவ் தாக்கரே

நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் அது தவறு என்று தேவேந்திர பட்வானிஸ் சொன்னால், நான் அதை ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் அவர் எங்கள் வழிகாட்டி. கடந்த காலங்களில் மகாராஷ்டிரா எம்.எல்.சி. பிரசாத் லாட், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராகவும், அமித் ஷாவுக்கு எதிராகவும் கூட மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அளித்த பல சம்பவங்கள் நடந்தன. முதல்வர் பயன்படுத்திய மொழி சரியாக இல்லை ஆனால் அவருக்கு எதுவும் நடக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.