இன்னோவா கார் அல்ல, ஏரோ பிளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது: நாஞ்சில் சம்பத்

 

இன்னோவா கார் அல்ல, ஏரோ பிளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது: நாஞ்சில் சம்பத்

தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக -அதிமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு 5 எம்பி சீட்டுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக -அதிமுக உடனே கைகோர்த்தது. இதனிடையே வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வரவிருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தவண்ணம் உள்ளது. இதனிடையே எந்த ஒரு மாவட்ட தலைவர் சட்டசபைக்கு பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்து அனுப்புகிறாரோ அவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும், ன்னும் ஆறு மாதத்தில் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இன்னோவா கார் அல்ல, ஏரோ பிளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது: நாஞ்சில் சம்பத்

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், இன்னோவா கார் அல்ல ஏரோ பிளேன் வாங்கி கொடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது என விமர்சித்துள்ளார். அதிகாரத்தின் மூலம் மிகப்பெரிய துஷ்பிரயோகத்தை செய்ய பாஜக தயாராகி விட்டது என்றும், தமிழகத்தில் கால் பதிக்க விரும்பும் அந்த காவிக்கும்பல் தமிழகத்தில் நுழைய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்த போது அவருக்கு ஜெயலலிதா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்தார். பின் நாளில் அதிமுகவில் இருந்து வெளியேறிய சம்பத், கட்சியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த இன்னோவா காரை மீண்டும் கட்சி தலைமையிடத்திலேயே ஒப்படைத்தார்.