பாஜக மாநிலத் தலைவர் முருகன் திமுகவைத்தான் ஆதரிப்பார்- நாஞ்சில் சம்பத்

 

பாஜக மாநிலத் தலைவர் முருகன் திமுகவைத்தான் ஆதரிப்பார்- நாஞ்சில் சம்பத்

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திமுக வைத்தான் ஆதரிப்பார் என திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணி, பிரச்சாரங்கள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்களில் ஈடுபட்டுவருகின்றன.

பாஜக மாநிலத் தலைவர் முருகன் திமுகவைத்தான் ஆதரிப்பார்- நாஞ்சில் சம்பத்

இந்நிலையில் அறந்தாங்கியில் நடைபெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், “பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் திமுகவைத்தான் நிச்சயம் ஆதரிப்பார். தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிவித்ததில் ஏதோ சந்தேகம் உள்ளது. யாருக்கோ சாதகமாக தான் இப்படி செய்திருக்கிறார்கள். யாருக்காகவோதான் கொண்டுதான் முன்கூட்டியே அறிவித்திருக்கிறார்கள். காவிரி வைகை குண்டாறு என்பது கருணாநிதியின் கனவு திட்டம். அந்த திட்டத்திற்காக ஓபிஎஸ் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. பிரதமர் மோடியும் உதவுவேன் என எந்த உத்தரவாதம் தரவில்லை. அதனால் இத்திட்டத்தை அதிமுகவினர் நிறைவேற்றப்பட்டனர். கண்டிப்பாக ஸ்டாலின் முதல்வர் ஆவார். அவர்தான் காவிரி வைகை குண்டாறு திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்” எனக் கூறினார்.