பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கடந்த ஜூலை மாதம் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த முருகேசனுக்கு சிறுமியின் தாயும் உடந்தை.

பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரும் பாலியல் தொல்லை அளித்தாக சிறுமி கூறியது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தலைமறைவாகிய நெல்லை மாவட்டம் உவரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்நிலையில் இந்த வழக்கில், பெற்ற தாயுடன் சேர்ந்து சிறுமியின் வாழ்க்கையை வீணடித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் ஜாமீன் கோரிய நாஞ்சில் முருகேசனிடம், உயர் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பினார். அத்துடன் ஜாமீன் வழங்க அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக். 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.