மகாராஷ்டிராவில் இனி எல்லா தேர்தல்களில் நாங்க 3 பேரும் சேர்ந்து போட்டியிடுவோம்… காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் இனி எல்லா தேர்தல்களில் நாங்க 3 பேரும் சேர்ந்து போட்டியிடுவோம்… காங்கிரஸ்

மகாராஷடிராவில் இனி எல்லா தேர்தல்களில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் இணைந்த போட்டியிடுவோம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

மகராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளுக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் வந்து போகிறது. இருப்பினும், கூட்டணி அரசாங்கம் வெற்றிகரமாக ஒரு ஆண்டை கடந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மகாராஷ்டிராவில் இனி எல்லா தேர்தல்களில் நாங்க 3 பேரும் சேர்ந்து போட்டியிடுவோம்… காங்கிரஸ்
நானா படோல்

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் எல்லா தேர்தல்களில் கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம் என்று அம்மாநில காங்கிரஸ் பிரிவு தலைவர் நானா படோல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் அனைத்து தேர்தல்களிலும் 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடும். அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்கள் சில சந்தப்பங்களில் பரிசீலிக்கப்படும்.

மகாராஷ்டிராவில் இனி எல்லா தேர்தல்களில் நாங்க 3 பேரும் சேர்ந்து போட்டியிடுவோம்… காங்கிரஸ்
பா.ஜ.க.

மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கம் தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்யும். மத்தியில் ஆட்சியில் செய்யும் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம் 6 சக்கரங்களில் இயங்குகிறது. தற்போது அவை ஒன்று ஒன்றாக கழண்டு வெளியே வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.