பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசுங்க.. இல்லன்னா சூட்டிங் நடத்த விடமாட்டோம்.. அமிதாப்பை மிரட்டும் காங்கிரஸ்

 

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசுங்க.. இல்லன்னா சூட்டிங் நடத்த விடமாட்டோம்.. அமிதாப்பை மிரட்டும் காங்கிரஸ்

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசவில்லை என்றால் உங்க பட சூட்டிங்கை நடத்த விடமாட்டோம் என்று பாலிவுட் நடிகர்கள் அமிதாப் மற்றும் அக்ஷய் குமாருக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் மன்மோகன் சிங் ஜியின் அரசாங்கம் இருந்தபோது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது அமிதாப் பச்சன் அல்லது அக்ஷய் குமாராக இருந்தாலும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து டிவிட் செய்வது வழக்கம். தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. (கியாஸ்) விலையை உயர்த்தி வருகிறது. ஆனால் அவர்கள் இன்று இது குறித்து ஏன் பேசவில்லை?

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசுங்க.. இல்லன்னா சூட்டிங் நடத்த விடமாட்டோம்.. அமிதாப்பை மிரட்டும் காங்கிரஸ்
பெட்ரோல் பங்கு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயல்பட்டது. எனவே அவர்கள் அதை விமர்சிக்க முடியும். அவர்கள் மக்களுக்கும், நீதிக்கும் ஆதரவாக பேசவில்லை என்றால், மகாராஷ்டிரா காங்கிரஸ் அவர்களின் (அமிதாப் மற்றும் அக்ஷய்) படங்களை மாநிலத்தில் படமெடுக்க அனுமதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் பா.ஜ.க.வோ பாலிவுட் நடிகர்களுக்கு ஆதரவாக தேசம் நிற்கும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம் கடம் கூறியதாவது:

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேசுங்க.. இல்லன்னா சூட்டிங் நடத்த விடமாட்டோம்.. அமிதாப்பை மிரட்டும் காங்கிரஸ்
நானா படோல்

நாட்டின் நலனுக்காக டிவிட் செய்த அமிதாப் மற்றும் அக்ஷயுடன் தேசம் நிற்கும். படமெடுக்க அல்லது படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று நடிகர்களை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டுகிறார்கள். அமிதாப் பச்சன் என்ன குற்றம் செய்தார்? நாட்டின் நலனுக்காக மட்டுமே டிவிட் செய்தார். நாட்டுக்கு வெளியே அமர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக சதி செய்கின்றனர் மற்றும் இமேஜை கெடுக்க முயற்சி செய்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான நபர்களை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.