மெரினாவில் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையம் திறப்பு!

 

மெரினாவில் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையம் திறப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்ஃபி மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகருக்கு அதிகளவில் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். சென்னையை குறிக்கும் அடையாளமாக திகழும் மெரினா கடற்கரையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். பெரும்பாலும் இளைய தலைமுறையினர் வரும் மெரினாவில், மக்களை கவரும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டது.

மெரினாவில் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையம் திறப்பு!

அதன் படி, மெரினா கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு எதிர்ப்பில் சென்னையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூபாய் 24 லட்சம் செலவில், செல்ஃபி மையம் அமைக்கப்பட்டது. இளைய தலைமுறையினர் அதிக அளவில் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதால், அவர்களை கவரும் விதமாக இந்த செல்ஃபி மையம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நின்று செல்ஃபி எடுக்கும் மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அதோடு, மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட எலக்ட்ரிக் மிதிவண்டி திட்டத்தையும் தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், சென்னையின் பல்வேறு இடங்களில் கூடுதலாக 1000 எலக்ட்ரிக் மிதிவண்டிகள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.