5 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு; மீறினால் அபராதம்: அதிரடி உத்தரவு!

 

5 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு; மீறினால் அபராதம்: அதிரடி உத்தரவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் மாலை 5 மணி மேல் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன் படி, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடமையாக்கின. கோவை, பெரம்பலூர், சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டன்களில் கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது. சில மாவட்டங்களில் வார சந்தைகளும் கூட மூடப்பட்டுள்ளன.

5 மணிக்கு மேல் கடைகள் அடைப்பு; மீறினால் அபராதம்: அதிரடி உத்தரவு!

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. காய்கறிகள், மளிகை கடைகள், ஜவுளி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்கு மூடப்பட்டன. அத்தியாவசிய கடைகள் மட்டுமே 5 மணிக்குப் பிறகு திறந்திருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு மாலை 5 மணிக்குமேல் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது. 5 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வைத்திருந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.