நாமக்கல்: ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது… சிகிச்சைக்கு அனுப்பிய டிரைவர் தலைமறைவு

 

நாமக்கல்: ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது… சிகிச்சைக்கு அனுப்பிய டிரைவர் தலைமறைவு

நாமக்கல்லில் ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரேஷன் பொருட்களை கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Heavily loaded cargo truck topples on Tema motorway -

நாமக்கல்லில் இருந்து பரமத்தி நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று நிலை தடுமாறிய வேன், ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வண்டியில் இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்கள் சாலையில் சிதறின. லேசமான காயம் அடைந்த ஓட்டுநரை மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாமக்கல்: ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது… சிகிச்சைக்கு அனுப்பிய டிரைவர் தலைமறைவு

 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வேன் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். வண்டியில் இருந்த அரிசி உள்ளிட்டவை ரேஷன் பொருட்கள் போல இருந்ததால் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு டன் ரேஷன் அரிசியை கோழிப் பண்ணைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓட்டுநரை போலீசார் தேடிச் சென்றனர். அவர் அங்கிருந்து அதற்குள்ளாக தப்பிச் சென்றிருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் கோழிப் பண்ணைக்கு அரிசி கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர், கோழிப்பண்ணை உரிமையாளர் உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.