“போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது” : இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு வேதனை

 

“போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது” : இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு வேதனை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

“போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது” : இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லக்கண்ணு வேதனை

தமிழக அரசியல் தலைவர்களில் மூத்த தலைவராக உள்ளவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லக்கண்ணு. இவர் இன்று தனது 96 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் தோழர் நல்லக்கண்ணுவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பேசிய நல்லக்கண்ணு, போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும் போராட வேண்டியுள்ளது. அரசியல் சட்டத்திற்கு தற்போது ஆபத்து வருகிறது அது பாதுகாக்கப்படுமா? என்று பேசினார்.

நல்லக்கண்ணு பிறந்தநாளுக்கு முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று பிறந்தநாள் காணும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு ஐயா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மகிழ்ச்சியோடு வாழ இறைவனை வேண்டி, எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.