3 மாத ‘பரோல்’ கேட்கும் நளினி

 

3 மாத ‘பரோல்’ கேட்கும் நளினி

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் இருகிறார் நளினி. அவர் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஆண்டு ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். லண்டனில் இருக்கு மகள் அரித்ராவுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக அனுமதி கேட்டு அவர் வெளியில் வந்தார்.இந்த நிலையில் அவர் தற்போது 3 மாத பரோல் கேட்டு சிறைத்துறை மூலமாக உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

3 மாத ‘பரோல்’ கேட்கும் நளினி


அவருக்கு சமீப காலமாக தொடர் வயிற்றுவலி மற்றும் பல் வலி இருப்பதாகவும்,கண்புரை நோய் ஏற்பட்டு பார்வை மங்கி வருவதாகவும் மேலும் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பதாகவும் தெரிவித்து தனக்கு சிகிச்சை செய்வதற்காக 3 மாத பரோல் அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

3 மாத ‘பரோல்’ கேட்கும் நளினி


பரோல் கிடைக்கும் பட்சத்தில் அவர் சித்தா மற்றும் ஆயூர் வேத சிகிச்சை மேற் கொள்ளப் போவதாவும், மனிதாபிமான அடிப்படையில் இந்த கோரிக்கையை ஏற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, சிறையில் இருக்கும் நளினிக்கு உடல் நலக் குறைவு உள்ளது. ரத்தத்தில் ‘ஹீமோகுளோபின்’ குறைவாக இருக்கிறது. அவரது கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டால், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.