Home க்ரைம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை... எச்சரித்த போலீஸ்... உயிரை மாய்த்த சாமியார்

பெண்களை வைத்து நிர்வாண பூஜை… எச்சரித்த போலீஸ்… உயிரை மாய்த்த சாமியார்

வீட்டின் அருகில் குழியைத் தோண்ட பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்த சாமியாரை காவல்துறையினர் எச்சரித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம், தேவூர் அருகே உள்ள புளியம்பட்டி குண்டாங்கல் காட்டை சேர்ந்த சாமியார் சரவணன்- சாந்தி தம்பதிக்கு மகனும், மகளும் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சாமியார் சரவணன் திடீரென்று மாயமானார். மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் தேடியும் சாமியார் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், வீட்டின் அருகே உள்ள ஒரு திட்டில் உடல் அழுகிய நிலையில் சாமியார் சரவணனின் உடல் கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்ககிரி காவல்துறையினர் , உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அமாவாசை அன்று தன்னை தேடி வருபவர்களுக்கு தாயத்து கட்டுவதும், மந்திரகயிறு கட்டுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் சாமியார் சரவணன். அத்தோடு பேய்களையும் ஓட்டுவதாகவும் கூறிவந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், தனது வீட்டின் அருகே குழி தோண்டி, பெண்களை நிர்வாணப்படுத்தி சாமியார் பூஜை செய்ததாக தேவூர் காவல்துறையினர் ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தேவூர் உதவி காவல்துறை ஆய்வாளர் ஒருவர், சாமியாரை எச்சரித்துள்ளார்.

இதனிடையே, சாமியார் இறப்பதற்கு முன் பேசி வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் பேசிய சாமியார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் என்பவர் தன்னை தாக்கினார் என்றும் தன் ஆன்மா அவரை சும்மா விடாது எனவும், காவல்துறையினர் தாக்கியதால்தான், நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறேன் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையிலேயே காவல்துறையினர் தாக்கியதில் சாமியார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம் : முதல்வர் இரங்கல்!

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் இருக்கும் கூகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாவோயிஸ்ட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அம்மாவட்டத்தின் இருவேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்கியதில், மதுரையை சேர்ந்த வீரர்...

உடலில் படுகாயங்கள்.. சீர்காழி அருகே இளம்பெண் மர்ம மரணம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இருக்கும் பெருந்தோட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் கலையழகி(26). இவர் முதுகலை பட்டதாரி. இவரது தாய் தமிழ்செல்வி இன்று காலை, இவரை...

“சன்னி லியோன் புருஷன் மாதிரி ஆகலாம்னுதான் இப்படி செஞ்சேன்” -லக்கிக்கு ஆசைப்பட்டு சிக்கிய நபர் .

நடிகை சன்னி லியோனின் கணவரின் கார் நம்பரை அதிர்ஷ்டத்திற்காக பயன்படுத்திய ஒருவரை போலீசார் கைது செய்தார்கள் சன்னி லியோன் இந்திய...

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து :உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி!

சிவகாசி, சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இருக்கும் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும்...
TopTamilNews