சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் பாஜக கூட்டணி?- நயினார் நாகேந்திரன் பதில்

 

சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் பாஜக கூட்டணி?- நயினார் நாகேந்திரன் பதில்

2021 தேர்தலை சந்திப்பது குறித்தும், கூட்டணி வைப்பது குறித்தும் 11 மாவட்ட மைய குழு பொறுப்பாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நெல்லையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில துணைத் தலைவரும் தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன், “பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சிதான். கட்சி வாய்ப்பளித்தால் கன்னியாகுமரி தொகுதியில் வருகின்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட தயார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்றால் எப்படி நம்மை தயார்படுத்தி கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் பாஜக கூட்டணி?- நயினார் நாகேந்திரன் பதில்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினி விருப்பபட்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்கலாம். அதிமுக, திமுக பெரிய கட்சி தான், பாஜக உட்பட எந்த கட்சியும் தனியாக போட்டியிட்டால் தான் வாக்கு வங்கி என்ன என்பது தெரியும்” எனக் கூறினார்.