‘சசிகலா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது’ – நயினார் நாகேந்திரன்

 

‘சசிகலா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது’ – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிகளவில் பேசப்பட்டு வரும் விஷயம் சசிகலா எண்ட்ரீ தான். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவையே தனது கைப்பிடிக்குள் வைத்திருந்த சசிகலா, எதிர்பாராத நேரத்தில் சிறைக்கு செல்ல நேர்ந்தது. அதன் பின்னர் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கி அவர் மீண்டும் கட்சியில் இணைய முடியாத வண்ணம் செய்து விட்டார். இருப்பினும் அதிமுகவை மீட்டெடுக்க பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் சசிகலா, அதிமுக கொடியுடன் மாஸாக சென்னை வந்தடைந்தார்.

‘சசிகலா வருகையால் எந்த மாற்றமும் ஏற்படாது’ – நயினார் நாகேந்திரன்

இனிமேல் அரசியல் களத்தில் என்ன நடக்குமோ என இரட்டை தலைமை கதி கலங்கி போயிருக்கிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல, சசிகலாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அதிமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், சசிகலா வருகையால் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுமென சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் புதிய கட்சியோ அல்லது புதிய நபரோ வந்தால் எந்த வித மாற்றமும் ஏற்பட்டது இல்லை என தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வரவிருப்பதாகவும் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.