பாஜகவில் ரஜினி இணைந்தாலும் அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை- நயினார் நாகேந்திரன்

 

பாஜகவில் ரஜினி இணைந்தாலும் அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை- நயினார் நாகேந்திரன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அதிமுகவில் யாரை முதல்வர் வேட்பாளாராக அறிவித்தாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும். மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்பதை வரவேற்கிறேன். பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழர்களுக்கு பதவி வழங்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது.

பாஜகவில் ரஜினி இணைந்தாலும் அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை- நயினார் நாகேந்திரன்

பாஜக வேறு அதிமுக வேறு என்று சொல்ல முடியாது இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல ஒரே சித்தாந்தம் உடையது. எங்களோடு கூட்டணியில் உள்ள கட்சி ஒற்றை தலைமையோடு ஒற்றைக் கருத்தோடு இயங்கினால் தான் தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்படுவார்கள். ரஜினியை அரசியலுக்கு வரவேற்பதில் எந்த தவறுமில்லை. ஆனால் ரஜினியை நிச்சயமாக முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்த மாட்டார்கள்” எனக் கூறினார்.